×

நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்வு

திருப்பூர், பிப். 3: பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளா நூல் உள்ளது. இந்நிலையில்  பஞ்சு விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாட்டின் காரணமாக நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பஞ்சு விலை உயர்வால் தமிழக நூற்பாலைகள் ஒசைரி நூல் விலையை உயர்த்தி வருகின்றன. பஞ்சு மற்றும் நூல் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக திருப்பூரில் உள்ள அனைத்து சங்கங்களும், ஆடை உற்பத்தியாளர்களும் நூல் விலையை குறைக்க வேண்டும் என நூற்பாலைகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.  இந்த மாதம் விலை உயர்வு இருக்காது எனவும் எதிர்பார்த்தனர். ஆனால் ஒசைரி நூல்கள் கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளன. இது குறித்து ஆடை தயாரிப்பாளர்கள் கூறியதாவது:நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்து கொண்டிருக்கிறோம். ஆர்டர்களை பெற முடியவில்லை. பெற்ற ஆர்டர்களை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அனுப்ப முடியவில்லை. இதுபோல் விலை நிர்ணயம் செய்ய முடியாமல் திணறி வருகிறோம். இதனால் நூற்பாலைகளுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தோம். இருப்பினும் இந்த மாதம் நூல் விலை உயர்வு இருக்காது என இருந்தோம். ஆனால் சற்றும் எதிர்பாராதவிதமாக ஒசைரி நூல்கள் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. இதனால் கவலையில் உள்ளோம். தற்போது 20ம் நம்பர் நூல் ரூ.233க்கும், 25ம் நம்பர் 242க்கும், 30ம் நம்பர் 254க்கும், 34 ம் நம்பர் 268க்கும், 36ம் நம்பர் 275க்கும், 40ம் நம்பர் 279க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு மீண்டும் எங்களை கவலையடை செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags :
× RELATED செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 1.3...